திருகோணமலை தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை தோப்பூர் நூரியா அரபுக் கல்லூரியின் வரவேற்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களால் கம்பெரலிய திட்டத்தின் கீழ் இவ் வரவேற்பு கோபுரத்துக்கு 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரவேற்பு கோபுரத்திற்கான கோரிக்கையை நூரியா அரபுக் கல்லூரி நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினரிடம் 2017 ஆம் ஆண்டு முன்வைத்திருந்தது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம்.லாஹீர், ஆர்.எம்.அன்வர், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ், முன்னால் கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூப், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.தாணீஸ்,பீ.டி.ஆப்தீன், எம்.பைசர், எம்.வஹ்ஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நி)








