போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.(சே)









