ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் , ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான 6ஆம் சுற்று பேச்சுவார்த்தை நாளை (26) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இரு கட்சிகளுக்குமிடையிலான 6ஆம் சுற்று கலந்துரையாடல் கடந்த 17 ஆம் திகதியே நடைபெற இருந்தது.

எனினும், சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரால் விடுக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் பேச்சு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு பிற்போடப்பட்ட சந்திப்பே நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்குமிடையிலான ஐந்தாம் சுற்று கடந்த 7 ஆம் நடைபெற்றது.(சே)

Previous articleகுருநாகல் வைத்தியரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல்!
Next articleவவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு !