கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 4 ராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த புகையிரதத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது நான்கு இராணுவத்தினர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்தது. ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Previous articleஇவ்வாரம் 13 பேருக்கு மரணதண்டனை-ஜனாதிபதி இரகசிய நடவடிக்கை!
Next articleமகளின் திருமணத்திற்கு செல்ல நளினிக்கு 6 மாதம் பரோல்?