ஹட்டன் – கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நீராடச் சென்றபோது உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.
மூவரின் சடலங்களும் நேற்று நள்ளிரவு ஹட்டன் சாத்து வீதியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
குறித்த சம்பவத்தில் தந்தையான 39 வயதுடைய நுவான் இந்திக்க விஜேயசூரிய மற்றும் மகள்களான 6 வயதுடைய நேசத்மா சாகதி விஜயசூரிய, 4 வயதுடைய நதிஷா ஈனோமி ஆகியோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த நபரின் மனைவி சேவை செய்யும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா ஒன்றின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மூவரின் இறுதி கிரியைகளும் இன்று மாலை 4 மணியளவில் ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள பொது மயான பூமியில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நகரில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களிலும் வெள்ளைக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததை காணமுடிந்தது. (நி)







