நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 22 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் நான்காயிரத்து 800 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இரண்டாவது கூடுதலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளவிய ரீதியில் கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மூன்றாவது மாவட்டமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (நி)








