பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கொட்டுவ வாரச் சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக தடை உத்தரவை வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது.
முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்கான தற்காலிக தடை தொடர்பான சபையின் தீர்மானத்தை வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேரா வென்னப்புவ பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
தங்கொட்டுவ வாரச் சந்தையின் பாதுகாப்பு தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார். (நி)