மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்கா     இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஒரு கோடி ரூபா செலவில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியுதவியுடன் காத்தான்குடி நகர சபையினால் நிர்மாணிக்கப்;பட்டுள்ள இந்த சிறுவர் விளையாட்டு பூங்காவினை காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், எம்.சி.ஜவாஹிர், ஏ.எல்.பஹ்மி, பொறியியலாளர் சிப்லி பாறூக், யு.எல்.எம்.என்.முபீன் ஏ.எல்.இல்மி அகமட் லெவ்வை, ஜனாபா சல்மா ஹம்சா, காத்தான்குடி நகர சபை செயலாளர் ஜனாபா றிப்கா சபீன் முன்னால் நகர சபை தவிசாளர் மர்சூக் அகமட் லெவ்வை, கிழக்கு மாகாண முன்னால் ஆயுளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முகம்மட் றிஸ்வின் உட்பட பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சிறுவர் விளையாட்டுப்பூங்கா காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகர சபை தவிசாளர் மர்சூக் அகமட் லெவ்வை முன்னால் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் அவரின் நிதியொதுக்கீட்டின் மூலம் நகர திட்டமிடல் அமைச்சராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எடுத்துக் கொண்ட முயற்சியினாலும் ஒரு கோடி ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

Previous articleகிளிநொச்சியில் புனித ரமழான் பெருநாள்!  
Next articleஞானசாரதேரர் அமைச்சர்களை நீக்கும் நிலை காணப்படுகின்றது – ரட்ணஜீவன்கூல்