நுவரெலியா மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள, ஐ றோட் இணைப்பு பாதைகள் மற்றும் பிரதான பாதைகளின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், வீதி அபவிருத்தி அதிகார சபை தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் ஆகியோரும், வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர், நுவரெலியா மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் மற்றும் நோர்வூட் பிரதேச பொறியியலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலில், நுவரெலியா மாட்டத்தில் புதிதாக காப்பட் இடப்பட்ட 20 வீதிகளை, பொது மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்கும், நோர்வூட் சந்தியில் இருந்து பொகவந்தலாவை வரைக்குமான பிரதான பாதை மற்றும் நோர்வூட் சந்தியில் இருந்து மஸ்கெலியா நல்லத்தண்ணி வரையான பாதையை அகலப்படுத்தி காப்பட் இடவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. (சி)






