இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர், வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர்.

இராணுவத்தினரை கொலை செய்து எரியூட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, மூன்று முன்னாள் போராளிகள், அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள், வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று குறித்த வழக்குகளுக்காக குற்றம்சாட்டப்பட்ட மூவரும், பலத்த பாதுகாப்புடன் பொலிஸாரினால் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். (சி)

Previous articleநான் போதையை எதிர்க்கின்றேன் வேலைத்திட்டம் வவுனியாவில்!
Next articleநுவரெலியா, ஐ றோட் இணைப்பு பாதைகள் மற்றும் பிரதான பாதைகளின் அபிவிருத்தி