ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், இலத்திரனியல் தேர்தல் பிரசார கருத்தமர்வு, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நடைபெற்றுள்ளது.
உண்ணாப்புலவு பகுதியில், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினருமான அன்ரனி றங்கதுசார தலைமையில், கருத்தமர்வு இடம்பெற்றது.
இதன் போது, எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச யாரை தேர்ந்தெடுகின்றாரோ, அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும், இனம் மதம் மொழி கடந்து, நாட்டிற்காக ஒற்றுமையுடன் சேவை செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றும், அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, அவர் வலியுறுத்தியுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் அன்ரனி றங்கதுசார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் தொழில்நுட்பத்திற்கு அமைவாக, பொதுஜன பெரமுனவின் தொலைபேசி மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் பாவனை தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தமர்வில், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், கட்சியின் பொறியியலாளர், குழு தலைவர் மாதவ மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். (சி)





