பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன.
ந்நிலையில் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நாடு நேரப்படி 11.53 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதேபோல் இந்தோனேசியாவில் உள்ள சவும்லாக்கி பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் இன்று ஏற்பட்டது. (சே)
Previous articleவவு.செட்டிக்குளத்தில் மனைவியை வெடி வைத்துக் கொலை செய்தவர் கைது.
Next articleமட்டு. கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானம் மின்ஒளி ஊட்டப்பட்டுள்ளது.