வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் மனைவியை வெங்காய வெடியை வெடிக்க வைத்து கொலை செய்த கணவர் செட்டிக்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 21ம் திகதி வெங்காய வெடியினை மனைவியின் முகத்தில் வெடிக்கவைத்து மனைவியை கொலை செய்ததன் பின்னர் குறித்த நபர் தலைமறைவாகியிருந்தார். விசாரணைகளை முன்னெடுத்துவந்த செட்டிக்குளம் பொலிஸார் குறித்த சந்தேக நபரான 43 வயதுடய து.ரவிச்சந்திரனை செட்டிக்குளம் புகையிரதநிலையத்திற்கு முன்பாக உள்ள காட்டுப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் கையில் வெங்காய வெடி வெடித்ததன் காரணமாக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அவரை பாதுகாப்புடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(மு)







