அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் சர்வாதிகாரத்தையும், 19 ஆவது திருத்தம் நிலையற்ற அரசாங்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்விரு திருத்தங்களையும் முழுமையாக இரத்துச் செய்தால் மாத்திரமே, மக்கள் ஆணையை மதிக்கும் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடியும் எனவும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு வருட முறையற்ற அரசியல் நிர்வாகத்திற்கு, 19 ஆவது திருத்தமே மூல காரணம், அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் சர்வதிகாரத்திற்கு வழிகோலியுள்ளது, 19 ஆம் திருத்தத்தின் ஊடாக, நாடு ஸ்திரத்தன்மையை இழந்தது.

இந்த இரண்டு திருத்தங்களையும் இரத்துச் செய்தால் மட்டுமே, நாட்டை சிறந்ததாக கட்டியெழுப்ப முடியும்.

இந்த அரசியலமைப்பு திருத்தம் காரணமாக, நாட்டில் ஒரே தலைமையின் கீழ் செயற்பட முடியாத காரணத்தினால்தான், நாட்டில் உறுதியற்ற தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleகல்முனையில், முஸ்லிம்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
Next articleவவு.செட்டிக்குளத்தில் மனைவியை வெடி வைத்துக் கொலை செய்தவர் கைது.