மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, 2005 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர மாணவர்களின் அனுசரணையில், ‘உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரியின் 2005 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர மாணவர்களினால் 6 ஆவது ஆண்டாக சிறப்பிக்கப்படுகின்றது.
கல்லூரி மாணவர்கள், சமூக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலும், இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரத்ததான நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் நிரோசன் வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், கல்லூரி பழைய மாணவர்கள், பாடசாலை நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.(சி)








