வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானினால், வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் விஷேட நிதியில் இருந்து, வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற விளையாட்டுக் கழகங்களுக்கு, உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு, உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கழக தலைவர் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான், பொருட்களை வழங்கி வைத்தார்.
இதன் போது, விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.(சி)

Previous articleவவுனியாவில் திறந்த சதுரங்கப் போட்டி!
Next articleமட்டு கட்டுமுறிவு அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு