தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடாத்துகின்ற இளைஞர் விளையாட்டு விழாவில் இம்முறை 31 ஆவது தேசிய விளையாட்டு விழா போட்டிகள் இடம்பெற்று வருகின்றது

அந்த வகையில் பெண்களுக்கான மென் பந்து கிரிக்கெட் போட்டி கண்டி கம்பளை விக்ரமபாகு மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை )மைதானத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்றது இந்த போட்டியில் இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பமான இறுதிப்போட்டியில் யாழ் மாவட்ட அணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது

மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் யாழ் மாவட்ட அணி இரண்டாம் இடத்தை பெற்று வடக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.(சி)

Previous articleபுளொட் அமைப்பின் பேராளர் மாநாடு வவுனியாவில்!
Next articleவவுனியாவில் திறந்த சதுரங்கப் போட்டி!