மட்டக்களப்பு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தினையும், சமயங்கள் மத்தியிலான ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் நோக்கில், உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கரித்தாஸ் எகட்டின் சமாதானக் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் ‘மாண்புமிகு மனிதர்களை மதிப்போம் சமாதானத்திற்கு கைகொடுப்போம்” என்னும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
கரித்தாஸ் எகட்டின் சமாதானக்குழுவின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி சாந்தி, மதத்தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இங்கு இன நல்;லுறவினை மேம்படுத்தல், மாணவர்கள் மத்தியில் இனமத முரண்பாடுகள் அற்ற சமூகத்தினை உருவாக்குவதன் அவசியம் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன.










