கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகாசபை அறிவித்துள்ளது.

Previous articleஈராக்கில் குண்டுத்தாக்குதல் பலர் மரணம்
Next articleகல்முனையில் போராட்டம் தொடர்கின்றது!