யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று (05) காலை 6.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.ஏ.பைசல் (மதனி) அவர்களின் நோன்புப் பெருநாள் விசேட உரை (பிரசங்கம்) இடம்பெற்றது.

இன்றைய பெருநாள் தொழுகையில் யாழ் வாழ் முஸ்லிம்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் யாழ்ப்பாணத்தில் நகர்ப்புற முஹிதீன் ஜும்ஆ மஸ்ஜித், முஸ்லிம் வட்டாரம் சின்ன மொஹிதீன் பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் அபூபக்கர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.(மா)

Previous articleஉடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் நினைவு தினம்
Next articleசாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்ட ரத்ன தேரர்!