புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியில் புதிய முஸ்லிம் தலைமைத்துவம் உருவாக்கப்பட்டு வருகிறது.
அதில் வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள முஸ்லிம் தலைவர்கள் இணைந்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.(சே)






