சமுத்திர பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.பீ.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.பீ.ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
பேராசிரியர் என்.பீ.ரத்நாயக்க, இதற்கு முன்னர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் புவிவள பொறியியல் பீடத்தின் தலைவராக பணிபுரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)









