புகையிரத தொழிற்சங்கம் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகவிருக்கின்றது
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஆரம்பிக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
எவ்வாறாயினும் இன்று பிற்பகல் நிதியமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.(சே)








