அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் செயலமர்வு இடம்பெற்றிருந்தன.
இவ் செயலமர்வானது சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்று இருந்தன.
இவ் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வின் பொது காலநிலை மாற்றங்கள் அதற்கான காரணங்கள் காலநிலை மாற்றத்தினால் எற்படக்கூடிய அனர்த்தங்கள் அவ்வாறு ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு விரிவாக விளக்கங்களுடன் செயலமர்வு இடம்பெற்று இருந்தன.
இவ் செலமர்வினை அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்து மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் இவ்செயலமர்வில் பொத்துவில் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.










