இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிர்காலத்தில் ஐ.எஸ் அமைப்பால் அச்சுறுத்தல் ஏற்படுமென இந்தியப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியப் புலனாய்வு பிரிவு இந்தியாவின் பொலிஸ் பிரதானிகளுக்கு 3 கடிதங்கள் ஊடாக இது குறித்து தெரியப்படுத்தியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தமது தளங்களை இழந்துள்ளமையினால் இலங்கை மற்றும் இந்தியா இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மத்திய உளவுத்துறை கூறியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள குறித்த எச்சரிக்கை கடிதம் ஊடாக, இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் தாக்குதல் நடத்தப்படக்கூடிய இடங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleநேற்றைய போட்டியில் நியூசிலாந்து வென்றது
Next articleகல்முனை மாநகர சபையில் ரத்ன தேரர் !