நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பகுதியில் பாரஊர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

டயகம பகுதியில் இருந்து கொழும்புக்கு தேயிலை தூள் ஏற்றி சென்ற பாரஊர்தி கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் 50அடி பள்ளத்தில் குடைசாய்ந்ததில், சாரதியும் நடத்துனரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நி)

Previous articleபதட்டம் ஆரம்பம்-அமெரிக்காவின் உளவு விமானத்தை வீழ்த்தியது ஈரான்
Next articleமீண்டும் அமைச்சு பதவியில் இருந்து விலகத்தயார்-கபீர் ஹசீம்