இந்தோனேசியாவின் பப்புவா மாநிலத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை. (நி)

Previous articleகல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த எதிர்ப்பு! (படங்கள் இணைப்பு)
Next articleகல்முனையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது!