வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அன்றையதினம், வைத்தியர் சாபிக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களம் பெற்றுக்கொண்டுள்ள தகவல் அடங்கிய விசேட அறிக்கையும் நீதிமன்றில் சமர்பிக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வைத்தியர் சாபிக் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக இதுவரை 758 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவர்களில் 601 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleநுவரெலியாவில் விபத்து: இருவர் காயம்
Next articleC.T.J.செயலாளர் அப்துல் ராசிக்கு அழைப்பு