நுவரெலியாவில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த கெப்வண்டியும் பத்தனை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தை அடுத்து ஊந்துருளியில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய கெப்வண்டியின் சாரதி தலவாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தனை ஸ்ரீபாத கல்வியற்கல்லூரியில் பணிபுரிந்து வரும் இருவரே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளன இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபட்டனர்.

கெப்வண்டியும், உந்துருளியும் அதிகவேகத்தில் சென்றமையினாலே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (நி)

Previous articleலொறிக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் (படங்கள் இணைப்பு)
Next articleவைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு 27 ஆம் திகதி விசாரணை