யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில், 29 ஆவது தியாகிகள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

கட்சியின் செயலாளர் எஸ்.குமார் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்ட இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட தோழர்களின் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் சுகு சிறிதரன் உயிரிழந்த தோழர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இவ்வஞ்சலி நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள், உட்பட கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். (நி)

Previous articleவவுனியாவில் விபத்து: ஐவர் காயம்
Next articleUpdate-புகையிரத பணிப்புறக்கணிப்பு நாளை 2 மணிவரை ஒத்திவைப்பு