புடில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று(ஜூன் 19) நடைபெறும் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எம்.பி.,க்களை உடைய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டம், டில்லியில் இன்று நடைபெறுகிறது. இதில், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, 2022ல் நடைபெறும், 75வது சுதந்திர தின விழா, இவ்வாண்டு நடைபெறும், மாகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் விழா உட்பட, பல்வேறு விவகாரங்கள் குறித்து, விவாதிக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக, ‘இன்று நடைபெறும் கூட்டத்தில், தான் பங்கேற்க வில்லை’ என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். (சே)

Previous articleமரம் வெட்டும் இயந்திரங்களுக்கு தடை
Next articleநாவிதன்வெளி பிரதேசத்தில் பொதுமக்களினால் சூழற்சிமுறை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பம்