பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட 50 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அமைச்சர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்
பாராளுமன்றில் இன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்-50 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தும் இன்னும் நடைமுறை படுத்தவில்லை ,மேலும் கம்பெரலிய வேலை திட்டத்தின் கீழ் மலையக அபிவிருத்திக்காக பாரிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதேபோல பெருந்தோட்ட மக்களுக்கு சமுர்த்தி வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்துடன் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது








