600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் கடந்த மே மாதம் 02ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படட மூன்று பேரும் அமைச்சர் லக்ஷ்மன் கெரியல்லவின் அமைச்சுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர்கள் என்பது கூறத்தக்கது.(சே)

Previous articleமலையக வைத்தியசாலைகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! (படங்கள் இணைப்பு)
Next articleபுகையிரத பணிப்புறக்கணிப்பு!