ஒட்டுமொத்த முஸ்லீம் தரப்பினரும் இராஜினாமா செய்தமை குற்றவாளிகளை காப்பாற்றுவதாக அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
ஓமந்தை வேப்பங்குளம் விநாயகர் ஆலயத்தின் வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு அமைச்சர் இரண்டு ஆளுநர்கள் மீது மட்டுமே குற்றச் சாட்டுக்கள் சுமதப்பட்டிருந்தன. அவர்கள் தனித்தனியாக இராஜினாமா செய்வதற்கு மாறாக அனைத்து முஸ்லீம் பிரமுகர்களும் தமது அமைச்சுக்களை இராஜினாமா செய்திருந்தார்கள். ஒற்றுமையை காட்டுவதாக ஒரு புறம் இது அமைக்கின்றபோதும். மறைமுகமாக தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகவும். குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும் அமைந்துள்ளது.
ஒற்றாக அனைவரும் இராஜினாமா செய்த காரணத்தினால் குற்றம் சுமத்தப்பட்ட மூவர் மீதும் விசாரணைகள் நடைபெறுவது தாமதப்படுத்தப்படுகின்றது. இதனை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாக மாற்றியமையினால் அவர்கள் விசாரணையிலிருந்து தப்பித்துக் கொள்கின்றார்கள். இந்த நிலையில் அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணை எந்த வகையில் உண்மைத்தன்மையாக அமையப் போகின்றது எனத் தெரிவித்துள்ளார்.







