யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியில் உள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் விசமிகளினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் உதயபுரம் வீதியிலுள்ள வேளாங்கன்னி மாதா சொரூபம் உடைக்கப்பட்டநிலையில், வெளியே வீசப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தனர்.
அத்தோடு, வேளாங்கன்னி மாதா சொரூபம் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.






