அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் மற்றும் ஸ்ரீவள்ளிபுரம் ஆகியவறியகிராமங்களில் சர்வதேச சத்தியசாயி நிறுவனத்தினால் குடிநீர் கிணறு மற்றும் வீடு என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு சத்திய சாயி நிலையத்தின் கிழக்கு பிராந்திய இணைப்புக் குழுதலைவர் என்.ஜெகன்நாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது முதலில் ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் சாயி பஜனைகள் மற்றும் தீபாராதணைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நிர்மாணிக்கப்பட்டு இருந்த இரண்டு இலட்சம் பெறுமதியாக குடிநீர் கிணற்றினை திறந்துவைத்ததுடன் நேருபுரம் கிராமத்தில் வறிய குடும்பம் ஒன்றிக்கு 09 இலட்சம் பெறுமதியான புதிய வீடு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதேவேளை நேருபுரம் கிராமத்தில் மற்றும் ஒரு வறிய குடும்பத்திற்காக அமைக்கப்படவுள்ள புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் சத்திய சாயி சர்வதேச நிறுவனம் இலங்கைக்கான தேசிய தலைவர் வி.மனோகரன், தேசிய சேவை இணைப்பாளர் கே.சிவராம், கிழக்குப் பிராந்திய தலைவர் என்.ஜெகன்நாதன், கிழக்குப் பிராந்திய சேவை இணைப்பாளர் பி.பிரசாந் மற்றும் ஆன்மீக இணைப்பாளர் கே.தேவானந்தம், செயலாளர் கு.சித்திசன், ஊடக இணைப்பாளர் வி.ரமேஷ்குமார் மற்றும் திருக்கோவில், தம்பிலுவில் சாயி நிலைய பக்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொணடனர்.











