முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொசன் வெளிச்சக்கூடு கண்காட்சி இன்றும் நாளையும் முல்லைத்தீவின் பல பகுதிகளில் நடைபெறுகின்றன.
இதன்போது, அழகிய சித்திர கலையம்சங்களுடனான பொசன் வெளிச்சக்கூடுகள் தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்காக தொங்கவிடப்பட்டுள்ளன.
இதேவேளை, விசேட தானசாலைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 59 ஆவது படைப்பிரிவின் பொசன் வெளிச்சக்கூடுகள் கண்காட்சியும், அதனோடு இணைந்த தானசாலைகளும் முல்லைத்தீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றது.
இதேவேளை, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 68 ஆவது படைப்பிரிவின் பொசன்வெளிச்சக்கூடுகள் கண்காட்சியும் அதனோடு இணைந்த தானசாலைகளும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை பொதுவிளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 64ஆவது படைப்பிரிவின் பொசன் வெளிச்சக்கூடு கண்காட்சியும், அதனோடு இணைந்த தானசாலைகளும் ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் 64வது படைப்பிரிவு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.(நி)