வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை பகுதியில் பொதிகள் சேவை என்ற பெயரில் போதைப்பொருள் கடத்திய நபரை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் பொதிகள் சேவை என்ற பெயரில் கொழும்பு பகுதியிலிருந்து பொகவந்தலா பகுதிக்கு ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்லும்போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டவளை பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனை செய்தபோதே போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது, சந்தேகநபரை துரத்திச்சென்ற பொலிஸார் ஹட்டன் பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தக நபரிடமிருந்து சுமார் 2000 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் செலுத்திய கார், மற்றும் அதிலிருந்த பொருட்களையும் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.(நி)