சவூதி அரேபியாவின் சட்டமான ஷர்யா சட்டத்தை, இலங்கையில் அரேபிய மொழிப் பல்கலைக்கழகம் அமைத்து கற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், மூன்றரை மணித்தியாலங்கள், வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மட்டக்களப்பு பகுதியில் ஷர்யா பல்கலைக்கழகத்தை அமைத்ததாக வெளியான தகவலுக்கு மத்தியில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மூன்றரை மணித்தியாலங்கள் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இதேவேளை, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில், நேற்று ஆஜராகி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, சாட்சியம் வழங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)






