கட்டுமான துறையில் வாய்ப்புகளை தேடியலையும் அனைவருக்கும் உதவிக்கரம்’ என்னும் தொனிப்பொருளில், கொழும்பில் கண்காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையில் கட்டுமான துறையில் எல்லைகளை விஸ்தரித்து, தொடர்ந்து 18 ஆண்டுகள் இலங்கை மக்களுக்காக மேற்கொண்ட சேவைகளை மேலும் முன்னோக்கி நகர்த்தி, 19 ஆவது ஆண்டில் கால்தடம் பதித்து வெளியீடு செய்யப்படவுள்ள ‘கன்ஸ்ட்ரக்ட் 2019’ கண்காட்சி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஓகஸ்ட் மாதம் 23-25 ஆம் திகதி வரை இக்கண்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை தேசிய சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்படும் ‘கன்ஸ்ட்ரக்ட் 2019’ தேசிய கண்காட்சி தொடர்பான உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வு, கொழும்பு சினமன் கிரோண்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே கலந்துகொண்டார்.(சி)







