பாடசாலை பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் இனிமேல் பெற்றோர்களை பயன்படுத்த வேண்டாம் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது,பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படவுள்ளது

தற்போது நாட்டின் பாதுகாப்பு, சிறந்த நிலையில் காணப்படுவதால் பாடசாலைகளின் பாதுகாப்பு வேலைத்திட்டங்களில் பெற்றோர்களை இணைத்துக் கொள்ள தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரால் இது சம்பந்தமாக அனைத்து மாகாண செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பாடசாலைகளினதும் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Previous articleவல்வெட்டித்துறையில் விழிப்புணர்வு நடைபவனி!
Next articleஆடை விவகாரம் தொடர்பில் தெரிவுக்குழுவில் இன்று ஜே.ஜே. ரத்னசிறி சாட்சியம்