திருகோணமலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர்கள், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் குடியுரிமையை நீக்க கோரிக்கை விடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், திருகோணமலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வைத்தியர்கள், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது, பதாதைகள் ஏந்தியும், கோசங்கள் எழுப்பியும், துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும், வைத்தியர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.(சி)













