சவுதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள விமான நிலையமொன்றை இலக்கு வைத்து ஏமன் ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் 26 பேர் காயமடைந்துள்ளானர்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் , மூன்று பெண்களும்,உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம்‍ மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலானது, விமான நிலையம் மீது தாழ்வாக பறக்கக்கூடிய இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஒரு நவீன வழிகாட்டு ஏவுகணையை கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சவுதி அரேபிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக ஹெளதி கிளர்ச்சி குழுவுடன் யேமன் அரசு நடத்திவரும் போரில் சவுதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டமைப்பு யேமனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன தேரர் மட்டக்களப்பு விஜயம்
Next articleமட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்  வித்தியாலய டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு