பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சேதமடைந்த சீயோன் தேவாலயத்தினை பார்வையிட்டார்.
தேவாலயத்தினை பார்வையிட்ட ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலயத்தில் தமது வணக்க வழிபாட்டினை மேற்கொண்டார்.
ரத்ன தேரர் மட்டக்களப்பு மாவட்டத்திக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்.
நாங்கள் நேற்றைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயத்தை மேற்கொண்டோம்
இந்த விஜயமானது ஹிஸ்புல்லாவின் தனியார் பல்கலைக்கழத்தை ஆராய்வு செய்யும் பயணமாகவே இருந்தது .
ஷரியா பல்கலைக்கழகமானது இஸ்லாமிய விரோத செயல்பாடுகள் முன்னெடுக்கின்ற பல்கலைக்கழகமாக நாட்டில் பேசப்படுகின்றது. எனவே தான் இது தொடர்பாக ஆராய்வதற்கான விஜயத்தினை மேற்கொண்டோம் .
விசேட விதமாக எதிர் காலத்தில் இந்துக்களும் பௌத்தர்களும் புனர் ஜீவனம் செய்வது தொடர்பில் எதிர் பார்த்துள்ளோம் , இந்துக்களும், பௌத்தர்களும் சமமானவர்களே என்ற நிலைபாட்டில் இரு சமூகங்களும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே நாங்கள் வருகை தந்தோம்.
அதேவேளை இந்து மக்களின் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்கும் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து ஆலயத்தை தரிசித்து விட்டு செல்வது சிறந்தது என நினைத்தே ஆலயத்திற்கு வருகை தந்தேன் என தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில், இந்த மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம் , இங்கு பொருளாதார பிரச்சினைகள், யுத்தத்தால் கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதார பிரச்சினைகள் , விவசாயிகளின் பிரச்சினைகள் , தமிழர்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் போன்று பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது, இவற்றினை தமிழர்களும் , பௌத்தர்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் வெற்றிக்கொள்ள முடியும், எனவே எதிர்வரும் ஐந்தாண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தையும் ,மாவட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து சுபீட்சமான சிறந்த மாவட்டமாக கட்டி எழுப்பலாம் என நினைக்கின்றேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (சி)







