மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகரின் முன்னாள் முதல்வரான ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இறுதியாக ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்கான தூதுவராகப் பணியாற்றியிருந்த நிலையில், தற்போது மேல்மாகாண ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் ஆளுநராக இருந்த அஸாத் சாலி, பாராளுமன்ற உறுப்பினர் ரத்னதேரரின் உண்ணாவிரப் போராட்டத்தின் பின்னர் பதவி விலகியதையடுத்து, மேல்மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமட்டக்களப்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு
Next articleஎமது மொழியை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும் – மட்டு மாநகர முதல்வர் (படங்கள்)