கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற, தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசரான விஜித் மலல்கொடவினால், அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோர் இதன் போது வருகை தந்திருந்தனர்.

தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதியினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.

இரண்டு கட்டங்களாக அமைந்த இந்த விசாரணை நடவடிக்கைகளின் இரண்டு இடைக்கால அறிக்கைகள், இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)

Previous articleரவூக் ஹக்கீம் – மு.க.ஸ்ராலின் சந்திப்பு!
Next articleநீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அமைச்சர் மனோ !