அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பதவிகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் 3 அமைச்சுப்பதவிகளுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி முன்னிலையில் பதில் அமைச்சர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதற்கமைய, றிசாட் பதியுதீன் அமைச்சராக பதவி வகித்த கைத்தொழில் – வர்த்தக – மீள்குடியேற்ற – கூட்டுறவு அபிவிருத்தி – தொழிற்பயிற்சி அமைச்சுக்கு, கைத்தொழில் மற்றும் வரத்தக அலுவல்கள் பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரண பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ரவூப் ஹக்கீம் அமைச்சராக பதவிவகித்த நகர அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக, நகரத்திட்டமிடல் நீர் விநியோக இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த லக்கி ஜயவர்த்தன நியமனம் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, கபீர் ஹாசிம் அமைச்சராக பதவிவகித்த நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் பதில் அமைச்சராக,
கனிய வள அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவி வகித்த அனோமா கமகே ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.(நி)






