கிளிநொச்சி நீதிமன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில், சிறைக்கைதிகள் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்தபோது வைத்த தீயினால் தீப்பரவரல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சிறைக்கைதிகளால் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட காணியிலிருந்த பெரிய ஆலமரம் ஒன்றிற்கு வைக்கப்பட்ட தீ பாரியளவில் சுவாலை விட்டு எரிந்து அருகிலிருந்த மக்கள் குடியிருப்பிற்குள் உள்ள வான் பயிர்களுக்கு பரவியுள்ளது.

சம்பவம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தீ அணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.


இருப்பினும் கரைச்சி பிரதேச தீ அணைப்புப் படையின் தீ அணைக்கும் இயந்திரம் மட்டுமே முதலில் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும், தீ அணைக்கும் நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் 30 நிமிடங்கள் தீ அணைக்கும் பணி தடைப்பட்டிருந்ததாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.(சி)


Previous articleநாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்கவே முடியாது சுமந்திரன் எம்.பி கருத்து
Next articleகாரைநகரில் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டல்