அம்பாறை மாவட்டம் திருக்கோவில் வலயக்கல்வி பிரிவின் கீழ் இயங்கும் பாடசாலைகளின் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சையானது இன்று  அறம்அறக்கட்டளை இலங்கை தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சித்தியடைவு வீதத்தினை அதிகரிப்பதற்ககவும் மாணவர்களுக்கு பரீட்சை மீது தன்நம்பின்னையினை ஏற்படுத்தும் நோக்கத்துடன்; இப்பரீட்சை நடத்துப்படுவதாக நிதியத்தின் ஸ்தாபகர் தெரிவித்தார்.

இப் பரீட்சையானது பனங்காடு-பாசுபதேசுபரர் வித்தியாலயம், கோளாவில்-விநாயகர் வித்தியாலயம் கோளாவில்- பெருநாவலர் வித்தியாலயம், தம்பட்டை- மகாவித்தியாலயம் , தம்பட்டை – செம்மண்புலை கணேசா வித்தியாலயம், அக்கரைப்பற்று-சென்ஜேன்ஸ்-வித்தியாலயம், கன்னகிபுரம்-கண்ணகி வித்தியாலயம், அளிக்கம்பை –புனித-சேவியர்-வித்தியாலயம், உள்ளிட்ட பாடசலைகளின் 200 மேற்பட்ட புலமைப்பரிசில் மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

மேலும் இப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் தங்களது நிறுவனமானது மாணவர்களின் கல்விநடவடிக்கை மீது மிகக் கூடுதலான கவனம் செலுத்தி சிறப்பான கல்விச்-சமூகத்தினை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.(MA)

Previous articleமுன்னாள் பா.உ வத்தேகம சமிந்த தேரர் மட்டு சீயோன் ​தேவாலயத்திற்கு விஜயம்!
Next articleவிபத்துக்களை தடுப்பதற்கான இலவச  டைனமோ