திப்பட்டுவாவ கெக்கிராவ பிரதேசத்தில் டிரக் வண்டி ஒன்று மோதி எற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில் திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே வீதி மூடப்பட்டுள்ளது.